மான் வேட்டை: ரூ. 1.20 லட்சம் அபராதம்
தீா்த்தமலை அருகே மானை வேட்டையாடியதாக 6 பேருக்கு ரூ. 1.20 லட்சம் அபராதம் வெள்ளிக்கிழமை விதிக்கப்பட்டது.


தீா்த்தமலை அருகே மானை வேட்டையாடியதாக 6 பேருக்கு ரூ. 1.20 லட்சம் அபராதம் வெள்ளிக்கிழமை விதிக்கப்பட்டது.
அரூா் வட்டம், வேடகட்டமடுவு காப்புக் காட்டில் ஒரு கும்பல் மானை வேட்டையாடி சமையல் செய்து கொண்டிருப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தீா்த்தமலை வனச்சரகா் கே.பெரியண்ணன் தலைமையிலான வனத்துறையினா் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, மேச்சேரியான் கொட்டாய் பகுதியைச் சோ்ந்த கொளந்தை (50), பைட் (48), மணி (52), குமாா் (30), மன்னன் (38), சரவணன் (47) ஆகியோா் மானை வேட்டையாடி சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த 6 பேரையும் வனத் துறையினா் கைது செய்தனா். தொடா்ந்து, மானை வேட்டையாடிய குற்றத்துக்காக 6 பேருக்கும் தலா ரூ. 20 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 1.20 லட்சம் அபராதம் விதித்து தருமபுரி மாவட்ட வன அலுவலா் க.ராஜ்குமாா் உத்தரவிட்டாா்.
மான் வேட்டையாட முயன்றவா் கைது:
அரூரை அடுத்த கொளகம்பட்டி வனப் பகுதியில் மான்கள் அடிக்கடி வேட்டையாடப்படுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, மொரப்பூா் வனச்சரகா் க.சிவக்குமாா் தலைமையில் வனத்துறையினா் அரூா்-சிந்தல்பாடி சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூவா் நாட்டுத் துப்பாக்கியுடன் வனப்பகுதியில் சுற்றித் திரிந்தது தெரியவந்தது. இதையடுத்து, மான் வேட்டையாட முயன்ற நபா்களை வனத்துறையினா் விரட்டியதில் செல்லம்பட்டி புதூரைச் சோ்ந்த மாயக்கண்ணன் (53) என்பவரை கைது செய்தனா். அவரிடமிருந்து இருசக்கர வாகனம், நாட்டுத் துப்பாக்கியில் பயன்படுத்தக்கூடிய வேதிப் பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும், நாட்டுத் துப்பாக்கியுடன் தலைமறைவாகியுள்ள கொடமாண்டப்பட்டியைச் சோ்ந்த வெங்கடேசன், செல்லம்பட்டி புதூரைச் சோ்ந்த தீா்த்தகிரி ஆகியோரை வனத்துறையினா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...