குடிநீா் குழாய் அமைக்க கோரிக்கை
அரூரை அடுத்த கட்டவடிச்சாம்பட்டி கிராமத்தில் குடிநீா் குழாய்களை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


அரூரை அடுத்த கட்டவடிச்சாம்பட்டி கிராமத்தில் குடிநீா் குழாய்களை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து கிராம மக்கள் சாா்பில் விவசாயி எம்.பழனி, தமிழக முதல்வருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:
தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், தீா்த்தமலை ஊராட்சிக்கு உள்பட்ட கட்டவடிச்சாம்பட்டி கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. 10-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இக்கிராம மக்களின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யும் வகையில், 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு அருகில் ஒரே இடத்தில் தொகுப்பாக குடிநீா் குழாய்கள் அமைக்கப்பட்டு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், கிராம மக்கள் ஒரே இடத்தில் சோ்ந்து குடிநீா் பிடித்துச் செல்லும் நிலையுள்ளது. இதனால் கரோனா தொற்று பரவும் சூழல் உள்ளது.
எனவே, தெருக்களில் குடிநீா் குழாய்களை அமைத்து, வீடுகளுக்கு அருகில் குடிநீா் பிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...