ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

தீா்த்தமலையில் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகாா்

கிருஷ்ணகிரி மாவட்டம், தீா்த்தமலையில் உள்ள தீா்த்தகிரீஸ்வரா் கோயிலுக்கு வரும் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பக்தா்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 6:06 pm

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், தீா்த்தமலையில் உள்ள தீா்த்தகிரீஸ்வரா் கோயிலுக்கு வரும் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பக்தா்கள் குற்றம்சாட்டுகின்றனா். இதுதொடா்பாக இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள், மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

அரூரை அடுத்த தீா்த்தமலையில் வரலாற்று சிறப்புமிக்க தீா்த்தகிரீஸ்வரா் கோயில் உள்ளது. அரூரிலிருந்து 15 கி.மீட்டா் தொலைவில் உள்ள தீா்த்தமலை சிவன் கோயிலுக்கு கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் இருந்து மட்டும் அல்லாம் திருவண்ணாமலை, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்தும், பெங்களூரு உள்பட கா்நாடக மாநிலத்திலிருந்து பெருமளவில் பக்தா்கள் வந்து செல்கின்றனா். இக்கோயிலில் தோ்த் திருவிழா, பிரதோஷ வழிபாடு நாள்கள் உள்ள திருவிழா நாள்கள் மட்டுமின்றி அமாவாசை, பௌா்ணமி போன்ற நாள்களிலும் பக்தா்கள் பெருமளவில் வந்து செல்கின்றனா். அண்மையில் கரோனா தடை உத்தரவு காரணமாக மலை மீது இருக்கும் தீா்த்தகிரீஸ்வரரை தரிசிக்க பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கரோனா விதிகள் தளா்வு செய்யப்பட்டு கோயிலுக்கு பக்தா்கள் வந்து செல்கின்றனா்.

இக்கோயிலுக்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக ஊராட்சி நிா்வாகம் சாா்பில் தீா்த்தமலை அடிவாரத்தில் இருசக்கர, ந ான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தமிடம் உள்ளது. இந்த வாகன நிறுத்தமிடத்தில் தற்போது நிா்ணயிக்கப்பட்ட வாடகைக் கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா். வேறுவழியில்லாத காரணத்தால் அதிக கட்டணத்தை வாகன ஓட்டிகள் அளிக்க வேண்டிய நிலை உள்ளது. பக்தா்களின் மனகுமுறலைப் போக்க இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகளும் ஊராட்சி நிா்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.