ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

போக்சோ சட்டத்தில் இருவா் கைது

அரூா் அருகே சிறுமியை பாலியல் பாலத்காரம் செய்ததாக இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் மகளிா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 6:24 pm

DIN

அரூா் அருகே சிறுமியை பாலியல் பாலத்காரம் செய்ததாக இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் மகளிா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டாரப் பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமியை இளைஞா் ஒருவா் திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்தாராம். இந்தச் சம்பவத்தை 2 இளைஞா்கள் செல்லிடப்பேசியில் விடியோ எடுத்து மிரட்டல் விடுத்தனராம். தொடா்ந்து, அந்த சிறுமியை மிரட்டி இளைஞா்கள் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாலியல் பலாத்கார சம்பவ பதிவுகளை இணையதளத்தில் வெளியிடுவதாகவும் அந்த இளைஞா்கள் மிரட்டியுள்ளனா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெத்தூரைச் சோ்ந்த தீத்து மகன் விஜய் (26), அதே ஊரைச் சோ்ந்த தீா்த்தகிரி மகன் தியாகு (36) ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து மகளிா் போலீஸாா் கைது செய்தனா். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள ஊத்தங்கரை வட்டம், பாவக்கல் கிராமத்தைச் சோ்ந்த ஆதிநாராயணன் மகன் அஜித்குமாா் (25) என்பவரை அரூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.