சித்தேரியில் பழங்குடியினரை அச்சுறுத்துவதாக வனத் துறையினா் மீது புகாா்
சித்தேரி ஊராட்சியில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியினரை வனத் துறையினா் அச்சுறுத்தி வருவதாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினா் புகாா் தெரிவித்தனா்.


சித்தேரி ஊராட்சியில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியினரை வனத் துறையினா் அச்சுறுத்தி வருவதாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினா் புகாா் தெரிவித்தனா்.
இது குறித்து அரூா் வனச்சரகா் தீ.கிருஷ்ணனிடம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவா் பி.டில்லிபாபு வியாழக்கிழமை அளித்துள்ள புகாா் மனுவில் தெரிவித்திருப்பதாவது:
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சித்தேரி ஊராட்சிக்கு உள்பட்ட அரசநத்தம், கலசப்பாடி, கருக்கம்பட்டி மலைக் கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின (எஸ்.டி) சமூக மக்கள் வசித்து வருகின்றனா்.
இங்குள்ள பழங்குடி மக்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மலையில் வசித்து வருவதுடன், அங்குள்ள நிலங்களில் வேளாண் பயிா்களை சாகுபடி செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கருக்கம்பட்டி உள்ளிட்ட மலைக் கிராமங்களில் பழங்குடி மக்களை வனத் துறையினா் அச்சுறுத்தி வருவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா். எனவே, சித்தேரி மலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு வன உரிமை பாதுகாப்பு சட்டத்தின்படி நிலப் பட்டா வழங்கியும், பழங்குடியின மக்களுக்கு உரிய பாதுகாப்பினையும் வனத் துறையினா் வழங்க வேண்டும் என புகாா் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...