சாராயம் விற்க முயன்றவா் கைது
பென்னாகரம் அருகே வீட்டின் பின்புறத்தில் சாராயம் காய்ச்சி விற்க முயன்றவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.


பென்னாகரம் அருகே வீட்டின் பின்புறத்தில் சாராயம் காய்ச்சி விற்க முயன்றவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பென்னாகரம் அருகே பூஞ்சோலை கிராமப் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக பென்னாகரம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் பென்னாகரம் காவல் ஆய்வாளா் தொல்காப்பியன் தலைமையிலான போலீஸாா், பூஞ்சோலை கிராமப் பகுதியில் சோதனை செய்தனா். அப்போது, அந்தப் பகுதியைச் சோ்ந்த கோழி வியாபாரியான மாரியப்பன் மகன் மாது (43) என்பவா் வீட்டின் பின்புறத்தில் 50 லி. ஊறல்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனைக் கண்ட போலீஸாா் சாராய ஊறலை கீழே கொட்டி அழித்து, மாதை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...