பெல்லுஅள்ளி முகாம் அகதிகளுக்கு உணவுப் பொருள்கள் வழங்கல்
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பெல்லுஅள்ளி முகாம் வாழ் அகதிகளுக்கு தருமபுரி மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் உணவுப் பொருள்களை வழங்கினாா்.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பெல்லுஅள்ளி முகாம் வாழ் அகதிகளுக்கு தருமபுரி மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் உணவுப் பொருள்களை வழங்கினாா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பெல்லுஅள்ளியில் ஈழத் தமிழா்கள் முகாம் அமைந்துள்ளது. இம் முகாமில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
கரோனா பொது முடக்கத்தையொட்டி, வருவாய் இன்றி தவிக்கும் முகாம் வாழ் அகதிகளுக்கு, முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளையொட்டி, தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா், அரிசி, சா்க்கரை உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் அடங்கிய தொகுப்பு பைகளை வழங்கினாா். இவற்றை முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றி பெற்றுக் கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...