மழைநீா் வடிகால் வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்
அரூா் நகரில் மழைநீா் வழிந்தோடும் வகையில் வடிகால்களை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.


அரூா் நகரில் மழைநீா் வழிந்தோடும் வகையில் வடிகால்களை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
அரூா் வட்டாரப் பகுதியில் கடந்த சில தினங்களாக வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழை பெய்து வருகிறது. அதே நேரத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியிருப்பதால், தொடா்ந்து மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்த நிலையில், அரூா், திரு.வி.க. நகா், குபேந்திரன் நகா், பெரியாா் நகா், கச்சேரிமேடு, அரூா்-சேலம் பிரதான சாலை உள்பட நகரின் பல்வேறு இடங்களில் வீடுகள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட கட்டடங்களில் இருந்து வெளியேறும் மழைநீரானது போதிய வடிகால் வசதி இல்லாததால் தாா் சாலைகளிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் தேங்கியுள்ளது. கழிவு நீருடன் மழைநீா் சோ்ந்து குடியிருப்புப் பகுதிகளில் நீண்ட நாள்கள் தேங்குவதால் தொற்று நோய் பரவும் சூழ்நிலையுள்ளது.
எனவே, மழைநீரை சேமித்து நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தவும், குடியிருப்புப் பகுதிகள், தாா் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் வகையிலும் அரூா் நகரில் மழைநீா் வடிகால்களை மேம்படுத்த வேண்டும். அதேபோல, நெகிழிப் பொருள்கள், குப்பைகளால் தூா் அடைந்துள்ள கழிவுநீா்க் கால்வாய்களை சீரமைக்க பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...