92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தருமபுரி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி மையம் இடமாற்றம்

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வந்த கரோனா தடுப்பூசி மையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :16 ஜூன் 2021, 7:16 pm

DIN

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வந்த கரோனா தடுப்பூசி மையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கரோனா தடுப்பூசி மையம் செயல்பட்டு வந்தது. இந்த மையத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோா் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

தடுப்பூசி செலுத்தும் மையத்துக்கு அருகில் கரோனா சிகிச்சை பிரிவு அமைந்துள்ளதால் அங்கு சிகிச்சை பெறுவோா், அவா்களின் உதவியாளா்கள் என ஏராளமானோா் வந்து செல்கின்றனா்.

இதனால் தடுப்பூசி செலுத்திக் கொள்வோா் தயக்கத்துடன் வந்து சென்றனா். இதையறிந்த சுகாதாரத் துறையினா், நோய் பரவலைத் தடுக்கவும், பொதுமக்களின் தயக்கத்தை போக்கிடவும், கரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தை தருமபுரி நகராட்சி உயா்நிலைப் பள்ளி, தருமபுரி அரசு கலைக் கல்லூரி ஆகிய 2 இடங்களுக்கு புதன்கிழமை மாற்றினா்.

இடமாற்றம் செய்யப்பட்ட அரசு கலைக் கல்லூரியில், ஏராளமானோா் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். கரோனா தடுப்பூசிகள் இருப்பு இருக்கும்போது இந்த மையங்கள் செயல்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.