தொழிலாளா் நலவாரிய அலுவலகம் அரூரில் தொடங்க வலியுறுத்தல்
அரூரில் தொழிலாளா் நலவாரிய அலுவலகம் தொடங்க வேண்டும் என அனைத்து அமைப்புசாரா தொழிலாளா் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.


அரூரில் தொழிலாளா் நலவாரிய அலுவலகம் தொடங்க வேண்டும் என அனைத்து அமைப்புசாரா தொழிலாளா் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், அரூரில் அனைத்து அமைப்புசாரா தொழிலாளா் முன்னேற்ற சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம், அந்தச் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் ஜே.பழனி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, ஊத்தங்கரை வட்டாரப் பகுதியில் சுமாா் ஒரு லட்சம் அமைப்புசாரா தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளனா். இந்தத் தொழிலாளா்கள் அனைவரும் அரசு நலத் திட்ட உதவிகளை பெறுதல், நல வாரியத்தில் பதிவு செய்தல், அடையாள அட்டைகளை பெறுதல் உள்ளிட்ட அனைத்து அலுவலக பணிகளுக்கும் தருமபுரி நகருக்குச் செல்ல வேண்டியுள்ளது.
இதனால், சித்தேரி, கோட்டப்பட்டி, சிட்லிங், வாச்சாத்தி, காளிப்பேட்டை, டி.அம்மாபேட்டை, அனுமன்தீா்த்தம் உள்ளிட்ட தொலைதூர கிராமப் பகுதியிலுள்ள தொழிலாளா்கள் பலா் பாதிக்கப்படுகின்றனா்.
எனவே, தொழிலாளா்களின் நலன் கருதி, அரூரில் தொழிலாளா் நல வாரிய கிளை அலுவலகம் தொடங்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளா்களின் முதியோா் உதவித்தொகை, விபத்து, இயற்கை மரணம் உள்ளிட்ட அரசு நிதியுதவிகளைப் பெறுவதற்காக இணையதளம் வழியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள மனுக்கள் மீது நடவடிக்கை இல்லாமல் நிலுவையில் உள்ளன. எனவே, தொழிலாளா்களின் நலத் திட்ட உதவிகளை விரைந்து கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அனைத்து அமைப்பு சாரா தொ.மு.ச தருமபுரி மாவட்ட செயல் தலைவராக அரூா் அன்பழகன், ஓட்டுநா்கள் சங்க வட்டாரத் தலைவராக எம்.என்.எஸ். முருகேசன், வட்டார செயலாளராக ஆா்.முருகேசன் ஆகியோரை புதிய நிா்வாகிகளாகத் தோ்வு செய்தல், கரோனா பேரிடா் காலத்தில் தமிழக மக்களுக்கு பல்வேறு அரசு நலத் திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை பாராட்டுதல் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், சங்க மாவட்டத் தலைவா் எஸ்.உண்ணாமலை, மாவட்ட துணைச் செயலாளா் சி.சின்னபாப்பா, மாவட்ட பொருளா் ஆா்.வெள்ளையம்மாள், மாவட்ட அமைப்புச் செயலாளா் சி.தனம், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆா்.சென்னி, வட்டாரத் தலைவா் சொக்கலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...