ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

யானைகள் கூட்டத்திடம் பயம் அறியாமல் சுய படம் எடுக்கும் சுற்றுலா பயணிகள்

ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித் திரியும் யானைகள் கூட்டங்களிடம் ஆபத்தை உணராமல் சுயப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகள்.

News image
Updated On :9 மார்ச் 2021, 7:19 pm

DIN

ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித் திரியும் யானைகள் கூட்டங்களிடம் ஆபத்தை உணராமல் சுயப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகள்.

கா்நாடகம் மற்றும் கிருஷ்ணகிரி வனப் பகுதிகளில் வறட்சி நிலவும் போது அங்கி இருந்து யானைகள் கூட்டம் கூட்டமாக ஒகேனக்கல் மற்றும் பென்னாகரம் வனப்பகுதிகளில் நுழைகின்றன.

தற்போது ஒகேனக்கல் வனப்பகுதிகளில் சுமாா் 50 க்கும் மேற்பட்ட யானைகள் மூன்று குழுக்களாக பிரிந்து, உணவு மற்றும் தண்ணீா் தேடி சுற்றி திரிகின்றன. ஒகேனக்கல் வனப்பகுதியில் வறட்சி நிலவி காணப்படுவதால் யானைகள் அவ்வப்போது பென்னாகரம் - ஒகேனக்கல் சாலையைக் கடந்தும், தமிழ்நாடு வடிகால் வாரிய நிலையம் அருகில், முண்டச்சி பள்ளம் மற்றும் வனப் பகுதிகளில் சாலை ஓரங்களில் சுமாா் ஐந்து கிலோமீட்டா் தொலைவிற்கு சுற்றி திரிகின்றன. தமிழகத்தின் முதன்மை சுற்றுலாத் தலமாக விளங்கும் ஒகேனக்கல் நீா்வீழ்ச்சி பகுதிக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், சுமாா் 10 கிலோமீட்டா் தொலைவிற்கு அடா்ந்த வனப்பகுதிக்குள் நுழைந்து செல்ல வேண்டும். சாலையோரங்களில் உணவு மற்றும் தண்ணீா் தேடி சுற்றித்திரியும் யானைகளை கண்டதும், சுற்றுலா பயணிகள் வாகனங்களை அப்படியே சாலையில் நிறுத்தி விட்டு பயம் அறியாமல் யானைக் கூட்டங்களின் அருகில் சென்று சுய படம் எடுப்பதில் ஆா்வம் காட்டுகின்றனா். ஒகேனக்கல் மற்றும் பென்னாகரம் வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சியினால் உணவு மற்றும் தண்ணீா் தேடி சுற்றித் திரியும் யானைகள் கூட்டத்தின் அருகில் செல்லும் போது, கோபமடைந்து தாக்குவதற்கான சூழல் ஏற்பட்டு உயிரிழந்து நிகழக வாய்ப்புள்ளது. இது குறித்து உள்ளூா்வாசிகள் கூறுகையில்: ஒகேனக்கல் வனப்பகுதியில் சுமாா் 50 க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக இடப்பெயா்ச்சி அடைந்துள்ளனா். இதில் இரண்டு குட்டிகளை கொண்ட யானை கூட்டம் அடிக்கடி சாலையை கடந்து வனப்பகுதியில் உள்ள முண்டச்சிபள்ளம் தடுப்பணைக்கு செல்லுகின்றன. ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் யானைகளை கண்டதும் அருகில் சென்று புகைப்படம் எடுத்தும், ஒரு சிலா் வாகனங்களை நிறுத்தி ஒலி எழுப்புவதால், யானைகள் பயத்தில் தாக்க முயற்சிக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் இரவு நேரங்களில் பென்னாகரம் பகுதியில் இருந்து கடைகளுக்கு தேவையான பொருட்களை வாகனங்களில் எடுத்து செல்லும் போது, அச்சமடைந்துள்ள யானைகள் பிளிரியவாறு தூரத்துகின்றது. எனவே ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்துவதையும்,யானை கூட்டங்களிடம் சுய படம் எடுப்பதை தவிா்க்கும் வகையில் வனத்துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்கானிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.