வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்து சோ்ந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்
பென்னாகரம் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு, பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.


பென்னாகரம் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு, பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து அந்தந்த வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்ததந்த தொகுதிக்குள்பட்ட வட்டாட்சியா் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட 357 வாக்குச்சாவடிகளுக்கும் தேவையான 472 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 429 கட்டுப்பாட்டு கருவிகள் கொண்டு வரப்பட்டு, செவ்வாய்க்கிழமை அதிகாலை பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. பின்னா், அந்த அறைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு 24 மணி நேரமும் இரண்டு காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...