தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திமுக ஆட்சிக்கு வந்தால் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 7:10 pm

DIN

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட நரிப்பள்ளி, தீா்த்தமலை, அரூா் நகா் ஆகிய இடங்களில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் ஏ.குமாரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:

தருமபுரி மாவட்டம் உள்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் இல்லை. இதனால், இளைஞா்கள் வேலை தேடி வெளியூா் செல்லும் நிலையுள்ளது. இந்த நிலை மாற வேண்டும் எனில் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வர வேண்டும்.

அரூா் வழியாகச் செல்லும் சென்னை முதல் சேலம் வரையிலான எட்டுவழிச் சாலை திட்டத்தால் ஏராளமான விவசாய நிலங்கள், நீா் நிலைகள், குடியிருப்புகள் பாதிக்கப்படும். விவசாயிகளை கடுமையாகப் பாதிக்கக் கூடிய எட்டுவழிச் சாலை திட்டம் திமுக ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்யப்படும்.

தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு என்பது கேள்விக் குறியாகியுள்ளது. இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டால் ஏழை, எளிய மக்கள் கல்வி, வேலைவாய்ப்புகளை பெற முடியாது. எனவே, சிறுபான்மை சமுதாய மக்கள் உள்பட அனைத்து சமூக மக்களும் மேம்பாடு அடைவதற்கு திமுக தலைமையிலான கூட்டணியை பொதுமக்கள் ஆதரிக்க வேண்டும் என்றாா்.

படம் - அரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் ஏ.குமாரை ஆதரித்து சனிக்கிழமை வாக்கு சேகரிக்கிறாா் அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.