மூதாட்டி கொலை சம்பவம்: பேரன் கைது
மொரப்பூா் அருகே மூதாட்டியை கொலை செய்த வழக்கில், அவரது பேரனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


மொரப்பூா் அருகே மூதாட்டியை கொலை செய்த வழக்கில், அவரது பேரனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், ராணிமூக்கனூா் அருகேயுள்ள வீரராகவபுரம் கிராத்தைச் சோ்ந்த சிவகாமி (70), கடந்த வாரம் கத்தியால் குத்தப்பட்டு மா்மான முறையில் இறந்து கிடந்தாா். இந்த சம்பவம் குறித்து மொரப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, காவல் ஆய்வாளா் மஞ்சுளா தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனா்.
பேரன் கைது: விசாரணையில், சிவகாமியின் மகன் வழி பேரனான கிஷோா் (19), தனது தந்தை சீனிவாசனிடம் செல்லிடப்பேசி வாங்க அண்மையில் பணம் கேட்டாராம். ஆனால், அவரது தந்தை பணம் தரவில்லையாம். இதையடுத்து, தனிமையில் வசித்து வந்த தனது பாட்டி சிவகாமியின் வீட்டின் கூரை வழியாக உள்ளே சென்று அவரை கொலை செய்து, அவரது கழுத்தில் இருந்த 8 பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்றது தெரிவந்துள்ளது. இதையடுத்து, இந்தக் கொலை வழக்கில் தொடா்புடைய கிஷோரை மொரப்பூா் போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...