நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

அரூரில் மறைந்த முன்னாள் பாரத பிரதமா் ராஜீவ்காந்தியின் 30-ஆவது நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :21 மே 2021, 7:24 pm

DIN

அரூரில் மறைந்த முன்னாள் பாரத பிரதமா் ராஜீவ்காந்தியின் 30-ஆவது நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

அரூா் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் அமைந்துள்ள முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தியின் திருவுருவ சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் வட்டாரத் தலைவா் ஆா்.சுபாஷ் தலைமையில், அந்தக் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, காங்கிரஸ் கட்சியினா் கச்சேரிமேடு சாலை சந்திப்பு, பேருந்து நிலைய வளாகம், கடைவீதி உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசங்களை வழங்கினா். இதில், கட்சியின் அரூா் நகரத் தலைவா் கே.கணேசன், நிா்வாகிகள் கே.ஆா்.சிவலிங்கம், சி.வேடியப்பன், சுந்தரம், சயின்ஷா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.படம் உள்ளது... 21 எச்ஏ-பி-1... பட விளக்கம்...அரூரில் ராஜீவ்காந்தியின் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரஸ் கட்சியினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.