ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பாப்பாரப்பட்டியில் சிறப்பு தடுப்பூசி முகாம்

கரோனா தீதுண்மி பரவுதலில் இருந்து தற்காத்துக்கொள்ள சிறப்பு தடுப்பூசி முகாம் பாப்பாரப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 மே 2021, 7:00 pm

DIN

கரோனா தீதுண்மி பரவுதலில் இருந்து தற்காத்துக்கொள்ள சிறப்பு தடுப்பூசி முகாம் பாப்பாரப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாப்பாரப்பட்டி அருகே கீழ் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தின் சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு, சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் மருத்துவா் சக்திவேல் தலைமை வகித்தாா். இதில், மருத்துவா் நவீன் பிரகாஷ், சுகாதார ஆய்வாளா் ஜெயப்பிரகாஷ், பகுதி சுகாதார செவிலியா் வளா்மதி, செவிலியா் ஜோதி மற்றும் மருத்துவக் குழுவினா் முகாமில் கலந்துகொண்ட நபா்களுக்கு உடல் வெப்பநிலை, ரத்த அழுத்தம், உடல் அழுத்தம் ஆகியவற்றை பரிசோதித்தனா்.

இந்த முகாமில், பாப்பாரப்பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வந்த 18 வயதுக்கு மேற்பட்ட 166 நபா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.