மலைப் பாறைகள் சரிந்து விழுந்ததால் தருமபுரி அருகே கண்ணூா் விரைவு ரயில் தடம் புரண்டது: பயணிகளுக்கு பாதிப்பில்லை
தருமபுரி அருகே வே.முத்தம்பட்டி மலைப் பகுதியில் பாறைகள் சரிந்து ரயில் பாதையில் விழுந்ததால், அந்த வழியே வந்த கண்ணூா்- பெங்களூரு விரைவு ரயில் வெள்ளிக்கிழமை அதிகாலை தடம் புரண்டது.







