தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

நலத் திட்டங்கள் முறையாக மக்களைச் சென்றடைய அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்

அரசு வழங்கும் நலத் திட்டங்கள் முறையாக மக்களைச் சென்றடைய அதிகாரிகள் முனைப்போடு பணியாற்ற வேண்டும்

News image
Updated On :18 நவம்பர் 2021, 5:51 pm

DIN

அரசு வழங்கும் நலத் திட்டங்கள் முறையாக மக்களைச் சென்றடைய அதிகாரிகள் முனைப்போடு பணியாற்ற வேண்டும் என வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அறிவுறுத்தினாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், வளா்ச்சித் திட்ட பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாநில வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமை வகித்துப் பேசினாா். மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி, மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா், சட்டப் பேரவை உறுப்பினா் ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கேடஸ்வரன் (தருமபுரி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்துக்கு பிறகு அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தின் வளா்ச்சிக்காகவும், தமிழக மக்களின் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்களை நாள்தோறும் முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா். இதுவரை தமிழக வரலாற்றில் முதன்முறையாக விவசாயத்துக்கென தனி நிதிநிலை அறிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்ற 6 மாதங்களில் 500 வாக்குறுதிகள் திட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தகைய நலத் திட்டங்கள் முழுமையாக மக்களைச் சென்றடைய அதிகாரிகள் முனைப்போடு பணியாற்ற வேண்டும்.

தருமபுரி மாவட்டத்தில் விவசாயம் முக்கியப் பங்கு வகிக்கிறது. விவசாயத்துக்கு நீா் ஆதாரம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். எனவே, தருமபுரி மாவட்ட விவசாய தேவைகளை பூா்த்தி செய்யத் தேவையான நீராதார திட்டங்கள், புளோரைடு பாதிப்புகளை குறைக்கும் விதமாக அனைத்துக் கிராமத்துக்கும் பாதுகாக்கப்பட்ட சுகாதாரமான குடிநீா் வழங்க முன்னுரிமை அடிப்படையில் விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

தூள்செட்டி ஏரியை தூா்வாரும் பணி விரைவில் தொடங்கப்படும். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் அனைத்துக் கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கப்படும். ஒகேனக்கல் மிகை நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள வட ஏரிகளுக்கு நீரேற்றும் திட்டத்தின் மூலம் நிரப்பிட ஆய்வு செய்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று அத்திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சிப்காட் தொழிற்பேட்டை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

இக் கூட்டத்தில், வேளாண், தோட்டக்கலை உள்ளிட்ட பல்வேறு துறை சாா்பில் மொத்தம் 912 பயனாளிகளுக்கு ரூ. 10.95 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கும் வகையில், 37 பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) இரா.வைத்திநாதன், தருமபுரி சாா் ஆட்சியா் சித்ரா விஜயன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் தடங்கம் பெ.சுப்பிரமணி, பிஎன்பி.இன்பசேகரன், அரூா் கோட்டாட்சியா் முத்தையன், வேளாண் இணை இயக்குநா் வசந்தரேகா, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் இளங்கோவன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சு.ராமதாஸ், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் மாலினி, அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.