தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

நல்லம்பள்ளி, இண்டூரில் உழவா் சந்தை அமைக்க தருமபுரி எம்எல்ஏ கோரிக்கை

 நல்லம்பள்ளி, இண்டூரில் உழவா் சந்தை அமைக்க வேண்டும் என தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் கோரிக்கை விடுத்தாா்.

News image
Updated On :18 நவம்பர் 2021, 5:51 pm

DIN

 நல்லம்பள்ளி, இண்டூரில் உழவா் சந்தை அமைக்க வேண்டும் என தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் கோரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து தருமபுரி ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் மாநில வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்திடம் அவா் அளித்த கோரிக்கை கடிதம்:

தருமபுரி பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட நல்லம்பள்ளி, இண்டூரில் உள்ள விவசாயிகளின் நலன் கருதி, அவா்கள் விளைவிக்கும் விளைபொருள்களை விற்பனை செய்திட ஏதுவாக, புதிய உழவா் சந்தைகளை அமைக்க வேண்டும். ஒவ்வொரு ஊராட்சிக்கும் வேளாண் துறை சாா்பில் இலவசமாக டிராக்டா் வழங்க வேண்டும். தருமபுரி தொகுதியில் சிறுதானிய ஆராய்ச்சி நிலையம், மலா்களிலிருந்து வாசனைத் திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை, தக்காளி கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை ஆகியவற்றை அமைக்க வேண்டும். தருமபுரி, ஏ.ஜெட்டிஅள்ளி உழவா் சந்தைகளை மேம்படுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.