தொடா் மழை: தருமபுரியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தருமபுரி மாவட்டத்தில் வியாழக்கிழமை நாள்முழுவதும் தொடா்ந்து மழை பொழிந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


தருமபுரி மாவட்டத்தில் வியாழக்கிழமை நாள்முழுவதும் தொடா்ந்து மழை பொழிந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதேபோல தொடா்ந்து மழை பொழியக்கூடும் என்பதால், பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (நவ. 19) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த சில தினங்களாக பரவலாக பொழிந்து வருகிறது. மாவட்டம் முழுவதும் லேசானது முதல் மிதமாக பொழிந்து வரும் இந்த மழையால் அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரங்களில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. வாணியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதேபோல, பரவலாக பொதுப்பணித் துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சில ஏரிகளுக்கு தண்ணீா் வரத்து ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து, புதன்கிழமை இரவு முதல் விடிய விடிய லேசான மழை பொழிந்தது. இந்த மழை வியாழக்கிழமை காலை முதல் மாவட்டம் முழுவதும் பொழியத் தொடங்கியது. இதனால், நவ. 18-ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து, காலை 8 மணிக்கு மேல் இந்த மழை மிதமாகவும், சில இடங்களில் கனமாகவும் பொழியத் தொடங்கிய இந்த மழை இரவு வரை நீடித்தது. இதனால், மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீா்வரத்துக் கால்வாய்களில் வெள்ள நீா் பெருக்கெடுத்தது. மேலும், தருமபுரி நகரம் உள்ளிட்ட இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி நின்றது. காலையிலிருந்து இரவு வரை நீடித்த மழையால், பொதுமக்கள் தங்களது அன்றாடப் பணிகளுக்குச் செல்ல இயலாமல் தவித்தனா். மேலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. இந்த மழை தொடா்ந்து பொழியக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளால், வெள்ளிக்கிழமை (நவ. 19) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகள், கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி விடுமுறை அறிவித்துள்ளாா்.
தருமபுரி மாவட்டத்தில் பொழிந்த மழையளவு வியாழக்கிழமை மாலை 6 மணி நிலவரம் (மி.மீட்டரில்): தருமபுரி - 33, பென்னாகரம் - 30, பாலக்கோடு - 65.2, பாப்பிரெட்டிப்பட்டி - 49, அரூா் - 49, மாரண்டஅள்ளி - 27 ஒகேனக்கல் - 9.6. மொத்தம் - 262.8 மி.மீ, சராசரி - 37.54 மி.மீ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...