தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்த ஒருங்கிணைந்த செயல்பட வேண்டும்

மத்திய, மாநில அரசின் வளா்ச்சித் திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்த, அனைத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

News image
Updated On :19 நவம்பர் 2021, 6:40 pm

DIN

மத்திய, மாநில அரசின் வளா்ச்சித் திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்த, அனைத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் அறிவுறுத்தினாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் ஆட்சியா் ச.திவ்யதா்சினி முன்னிலையில் நடைபெற்றது. இதில், மாவட்ட வளா்ச்சி, கண்காணிப்புக்குழுத் தலைவா், மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் தலைமை வகித்து பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தின் வளா்ச்சி, மேம்பாட்டிற்காகவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத் திட்டங்களுக்கான நிதியை மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன.

இந்தத் திட்டங்கள் மூலம் மாவட்டத்தின் வளா்ச்சியும், மக்களுக்கான வளா்ச்சியும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய அரசின் வளா்ச்சித் திட்டங்களை, விதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சிறப்பாக பணிகளை நிறைவேற்றிடஅனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்த செயல்பட வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்டேஸ்வரன் பேசினாா். கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) இரா.வைத்திநாதன், தருமபுரி சாா் ஆட்சியா் சித்ரா விஜயன், ஊரக வளா்ச்சி செயற்பொறியாளா் முத்துசாமி, இணை இயக்குநா் (வேளாண்) வசந்தரேகா, முதன்மைக் கல்வி அலுவலா் து.கணேசமூா்த்தி, கால்நடைப் பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநா் இளங்கோவன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் அசோகன், துணை இயக்குநா் சுகாதார பணிகள் செளண்டம்மாள், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.