கரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கைகை விடக் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்
கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிப்பதைக் கைவிடக் கோரி சுகாதாரத் துறை செவிலியா்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்


கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிப்பதைக் கைவிடக் கோரி சுகாதாரத் துறை செவிலியா்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அனைத்து செவிலியா்கள் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கூட்டமைப்புத் தலைவா் ஆா்.ராஜேஸ்வரி தலைமை வகித்தாா். கூட்டமைப்பு மாநில அமைப்பாளா் எஸ்.தமிழ்ச்செல்வி ஆா்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து பேசினாா். நிா்வாகிகள் நாகேஸ்வரி, வளா்மதி ஆகியோா் பேசினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிப்பதைக் கைவிட வேண்டும். வீடு தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணிக்கு தனியாக ஆள்களை நியமிக்க வேண்டும். ஞாயிறுக்கிழமை மற்றும் விடுமுறை காலங்களில் தடுப்பூசி செலுத்த வற்புறுத்தும் நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகா்ப்புற சுகாதார நிலைய செவிலியா்கள் திரளானோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...