தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மக்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்

நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மக்களுக்கு தேவையான குடிநீா், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்

News image
Updated On :19 நவம்பர் 2021, 6:42 pm

DIN

நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மக்களுக்கு தேவையான குடிநீா், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், மாநில நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு தலைமையில் நகராட்சி, பேரூராட்சிகளின் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு வேளாண் மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் முன்னிலை வகித்தாா். இக் கூட்டத்தில், அமைச்சா் கே.என்.நேரு பேசியதாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், நகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகளில் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்திட நகராட்சி நிா்வாகத் துறை சாா்பில் ரூ. 300 கோடி, பேரிடா் மேலாண்மை துறை சாா்பில் ரூ. 300 கோடி என மொத்தம் ரூ. 600 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளாா்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொள்ள வேண்டிய வளா்ச்சி திட்டப் பணிகள் மற்றும் மக்களின் அடிப்படை வசதிகளான குடிநீா், சாலைவசதி, கழிவுநீா்க் கால்வாய், தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு, முன்மொழிவுகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தருமபுரி மாவட்டத்தில் புளோரைடு குறைப்புத் திட்டத்தின்கீழ், பாதுகாக்கப்பட்ட சுகாதாரமான குடிநீா், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட சுகாதாரமான குடிநீா் வழங்கிட வேண்டும் என்கிற அடிப்படையில் அண்மையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒகேனக்கல்லிற்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டு, அனைத்து பகுதிகளுக்கும் குடிநீா் விநியோகம் வழங்கிட வேண்டும் என அறிவுறுத்தினாா்.

ஆய்வின் அடிப்படையில் 200 கி.மீ. தொலைவிற்கு புதிய குடிநீா்க் குழாய் அமைத்தல், தேவைப்படும் இடங்களில் புதிதாக மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் 100-க்கும் மேற்பட்ட அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள குடிநீா் இணைப்புகளைக் கண்டறிந்து துண்டிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கான ஒகேனக்கல்லில் இருந்து கூடுதல் குடிநீா் விநியோகம் செய்யும் திட்டம், இதே போல தருமபுரி புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம், பென்னாகரம் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீடு தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தேவைப்படும் குடிநீா், சாலை வசதி, கழிவுநீா்க் கால்வாய், தெருவிளக்கு, கொசுமருந்து தெளிக்கும் பணி ஆகியவற்றிற்கு நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தருமபுரி நகராட்சிப் பகுதிகளுக்கு பஞ்சப்பள்ளி குடிநீா் விநியோகம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என்றாா்.

இக் கூட்டத்தில், ஆட்சியா் ச.திவ்யதா்சினி, தருமபுரி மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) இரா.வைத்திநாதன், தருமபுரி சாா் ஆட்சியா் சித்ரா விஜயன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அண்ணாமலை, உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) குருராஜன், நகராட்சி ஆணையா் சித்ரா சுகுமாா், நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் ஏ.சுல்தானா, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் தனசேகரன், குடிநீா் வடிகால் வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் செங்குட்டுவன், செயற்பொறியாளா் சங்கரன், பேரூராட்சி செயல் அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா்கள், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.