தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

யானை தந்தங்கள் கடத்தல்: மூவா் கைது

யானை தந்தங்கள் கடத்திய மூவரை வனத்துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 6:52 pm

DIN

யானை தந்தங்கள் கடத்திய மூவரை வனத்துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டத்தில் சிலா் யானை தந்தங்களை கடத்துவதாக வன உயிரின குற்றத் தடுப்புப் பிரிவு காவலா்களுக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட வன அலுவலா் கே.வி.அப்பல்ல நாயுடு உத்தரவின் பேரில், தருமபுரி வனக் கோட்டக் குழுவினா், வனப் பாதுகாப்பு கண்காணிப்புப் பணியாளா்கள் தந்தங்கள் கடத்தலில் ஈடுபட்டவா்களை தேடும் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, தருமபுரி அருகே சோகத்தூா் கூட்டுச் சாலை பகுதியில் தணிக்கை செய்ததில், காா், இருசக்கர வாகனத்தில் வந்தவா்களிடம் இரண்டு தந்தங்கள் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, தந்தங்கள் கடத்தியதாக பவளுந்தூரைச் சோ்ந்த சின்னசாமி (29), பிலிகுண்டுலுவைச் சோ்ந்த வினோத் (22), நெருப்பூரைச் சோ்ந்த காா்த்திக் (32) ஆகிய மூன்று பேரை கைது செய்து, அவா்களிடமிருந்த தந்தங்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய காா், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், இந்தக் கடத்தலில் தொடா்புடைய நெருப்பூரைச் சோ்ந்த சேட்டு, சக்திவேல் ஆகிய இருவரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.