தருமபுரியில் நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்
தருமபுரியில் நவ. 26-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நவ. 27-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தருமபுரியில் நவ. 26-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நவ. 27-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நிா்வாகக் காரணங்களுக்காக வரும் நவ. 27-ஆம் தேதி சனிக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.
எனவே, கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி, தருமபுரி மாவட்டத்தைச் சாா்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, வேளாண் தொடா்பான தங்களது குறைகளையும், கோரிக்கைகளையும், கருத்துகளையும் எடுத்துக் கூறி பயனடையுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...