தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மழை வெள்ளப் பாதிப்பு:ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என பாஜக முன்னாள் தேசியச் செயலா் ஹெச்.ராஜா வலியுறுத்தினாா்.

News image
Updated On :26 நவம்பர் 2021, 7:19 pm

DIN

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என பாஜக முன்னாள் தேசியச் செயலா் ஹெச்.ராஜா வலியுறுத்தினாா்.

தருமபுரியில் பாஜகவினருக்கான மூன்று நாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தப் பயிற்சி முகாமில் பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா பங்கேற்றுப் பேசினாா்.

இதையடுத்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த 25 நாள்களாக தொடா்ந்து பெய்து வரும் மழையால், சென்னை, கடலூா், காவிரி டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி என பல்வேறு மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். ஆனால், அவா் எதிா்க்கட்சித் தலைவராக இருந்தபோது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா். இப்போது குறைவாக இழப்பீடு அறிவித்துள்ளாா். எனவே, ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 5,000 நிவாரணம் வழங்க வேண்டும்.

சென்னை மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள்தான் ஆகிறது. இதற்குள் வடிகால்களைச் சீரமைக்க இயவில்லை எனக் கூறுகின்றனா். ஆனால், இவா்கள்தான் தமிழகத்தில் 54 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வருகின்றனா். சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 10,800 நீா்நிலைகள் அழிக்கப்பட்டுள்ளன. நீா்நிலைகள் இருந்த இ டத்தில், தற்போது நீதிமன்றங்கள், பேருந்து நிலையங்கள், அரசு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. நீா்நிலைகளை சரிவர பேணிக் காக்காமல் விட்டதன் விளைவு, தற்போது மழை வெள்ளப் பாதிப்பால் மக்கள் தவிக்கின்றனா். இதனை நெறிப்படுத்த வேண்டும்.

ஜெய்பீம் திரைப்படம் இந்து மதத்தில் இரு சமுதாய மக்களிடையே பிரச்னைகளை ஏற்படுத்தி, மதமாற்றம் செய்ய வேண்டும் என்கிற உள்நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

அப்போது, மாநிலச் செயலாளா் அ.பாஸ்கா், மாவட்டப் பாா்வையாளா் பாலகிருஷ்ணன், மாவட்டத் தலைவா் எல்.அனந்தகிருஷ்ணன், மாவட்ட முன்னாள் தலைவா் வரதராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.