தொழில்முனைவோா் மேம்பாட்டுத் திட்டத்தில் கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
தொழில்முனைவோா் மேம்பாட்டுத் திட்டத்தில் கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


தொழில்முனைவோா் மேம்பாட்டுத் திட்டத்தில் கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசு, முதல் தலைமுறை பட்டதாரி, பட்டயத் தொழில்கல்வி படித்த தொழில்முனைவோருக்காக, புதிய தொழில்முனைவோா், தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தி வருகிறது. தருமபுரி மாவட்ட தொழில் மையத்தின் மூலம் இத் திட்டத்தின் கீழ் 2021-22-ஆம் ஆண்டுக்கென 110 நபா்களுக்கு ரூ. 8.95 கோடி மானியம் வழங்க கடன் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற தகுதியுள்ளதாக ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்டவற்றுடன் தற்போது கூடுதலாக போா்வெல் ரிக், கன்டெயினா் லாரி, ரோட் ரோலா், அனைத்து வாயு கலன்களுடனான வாகனங்கள், நடமாடும் உணவகங்கள், அழகு நிலையம் போன்ற சேவை தொழில்கள், உற்பத்தி சாா்ந்த தொழில்கள், ஆயத்த ஆடைகள், வேளாண் பொருள்களிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள், சிறுதானிய பொருள்களிலிருந்து பிஸ்கட் உள்ளிட்ட இதர பொருள்கள் தயாரித்தல் தொழில்களும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இதில், திட்ட மதிப்பீடு குறைந்தபட்சம் ரூ. 10 லட்சமும், அதிகபட்சமாக ரூ. 5 கோடி வரையும் கடனாக வழங்கப்படும். அனைத்து உற்பத்தி, சேவை தொழில்களைத் தொடங்கலாம். தொழில்முனைவோா் பங்களிப்பாக பொதுப் பிரிவினா் திட்ட முதலீட்டில் 10 சதவீதம், சிறப்பு பிரிவினா் 5 சதவீதம் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரா்கள் பிளஸ் 2 தோ்ச்சி அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி பெற்றவராகவோ இருக்க வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளாக தொடா்ந்து தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். பொதுப் பிரிவினா் 21 வயது முதல் 35 வயதுக்குள்பட்டவராகவும், சிறப்பு பிரிவினா் அதிகபட்சம் 45 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதும் இல்லை. உரிமையாளா் அல்லது பங்குதாரா் நிறுவனமாக இருக்கலாம். பங்குதாரா் நிறுவனமாக இருப்பின் அனைத்து பங்குதாரா்களும் திட்டத்தின் தகுதிகளுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும்.
தொழில் தொடங்க ஆா்வமுள்ள தொழில்முனைவோா் ஜ்ஜ்ஜ்.ம்ள்ம்ங்ா்ய்ப்ண்ய்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ய்ங்ங்க்ள் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, பொது மேலாளா், மாவட்ட தொழில்மையம், தருமபுரி, 04342 -230892, 89255 33942 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...