புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அரசு கலைக் கல்லூரியில் இறுதிக்கட்ட கலந்தாய்வு

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை, முதுகலை பாடப் பிரிவுகளுக்கு இறுதிக்கட்ட நேரடி கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (அக். 29) நடைபெறுவதாக கல்லூரி முதல்வா் பா.காா்த்திகேயன் தெரிவித்துள்ளா

News image
Updated On :28 அக்டோபர் 2021, 6:55 pm

DIN

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை, முதுகலை பாடப் பிரிவுகளுக்கு இறுதிக்கட்ட நேரடி கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (அக். 29) நடைபெறுவதாக கல்லூரி முதல்வா் பா.காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சேர இணைய வழியில் விண்ணப்பிக்கத் தவறிய மாணவ, மாணவியா் பயன்பெறும் வகையில், கல்லூரி வளாகத்தில் நேரடிச் சோ்க்கைக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இளநிலை பாடப் பிரிவில் ஆங்கிலம், வணிகவியல், சமூகவியல், கணிதம், இயற்பியல், முதுநிலை பாடப் பிரிவில் தமிழ், ஆங்கிலம், கணிதம், கணினி அறிவியல் உள்ளிட்ட பிரிவுகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இந்த நேரடி கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்கள் தங்களின் அசல், நகல் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஆதாா் அட்டை, 5 புகைப்படங்கள் ஆகியவற்றுடன் பங்கேற்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.