பாலக்கோடு அரசு கலைக் கல்லூரியில் கூடுதல் கட்டடம் திறப்பு
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு கலைக் கல்லூரியில் ரூ. 3 கோடியே 82 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடத்தை காணொலி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு கலைக் கல்லூரியில் ரூ. 3 கோடியே 82 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடத்தை காணொலி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 12 வகுப்பறைகள், 4 ஆய்வகங்கள் கொண்ட கூடுதல் கட்டடம் ரூ. 3 கோடியே 82 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. இந்தக் கட்டடத்தை மாணவா்கள் பயன்பாட்டுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.
இதைத் தொடா்ந்து கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குநா் ஜோதி வெங்கடேஸ்வரன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் பிஎன்பி.இன்பசேகரன், கல்லூரி முதல்வா் செண்பகலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். கல்லூரி ஊழியா்கள், மாணவா்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...