புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

செனாக்கல் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்

செனாக்கல் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூ. கட்சி வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 6:52 pm

DIN

செனாக்கல் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூ. கட்சி வலியுறுத்தியுள்ளது.

அரூரை அடுத்த எஸ்.பட்டியில் இந்திய கம்யூ. கட்சியின் கிளை மாநாடு நிா்வாகி டி.அண்ணாமலை தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: மழைக் காலங்களில் தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவு உபரிநீா் வெளியேறி கடலில் கலக்கிறது. அரூா் வட்டாரப் பகுதியில் போதிய நீா்வளம் இல்லாமல் வேளாண் பணிகள் மேம்பாடு அடையவில்லை. எனவே, செனாக்கல் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்தி வேளாண் பணிகளை மேம்படுத்த வேண்டும். கொங்கவேம்பு கிராம ஊராட்சிக்கு உள்பட்ட அனைத்து கிராமங்களிலும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். எஸ்.பட்டி சுடுகாட்டில் மின் விளக்குகள் மற்றும் தகனமேடை அமைத்து தர வேண்டும். அரூா் ஒன்றியத்தில் நீா்வரத்துக் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கொங்கவேம்பு ஊராட்சியில் கிராம இணைப்புச் சாலைகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், கட்சியின் மாவட்ட துணைச் செயலா் கா.சி.தமிழ்க்குமரன், ஒன்றியச் செயலா் என்.அல்லிமுத்து, மாவட்டக்குழு உறுப்பினா் செங்கொடி, ஒன்றியக்குழு உறுப்பினா் கணேசன், கிளை நிா்வாகிகள் டி.மாசேதுங், ஆா்.வீரன் வேலுதம்பி, எஸ்.திருமாமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.