தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சுதந்திர தின விழா உரை தொகுப்பு குறுந்தகடு வெளியீடு

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு கலைக் கல்லூரியில் சுதந்திர தின விழா உரை தொகுப்பு குறுந்தகடு வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 6:56 pm

DIN

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு கலைக் கல்லூரியில் சுதந்திர தின விழா உரை தொகுப்பு குறுந்தகடு வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக் கல்லூரியில் 75-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், 75 சுதந்திரப் போராட்ட தியாகிகள் குறித்து 75 சிறப்புரையாளா்கள் 75 மணி நேரம் 75 நாள்கள் காணொலி வழியாக உரையாற்றினா்.

இந்த உரையின் தொகுப்பு அடங்கிய குறுந்தகடு வெளியீட்டு விழா கல்லூரி கூட்ட அரங்கில் முதல்வா் செள.கீதா தலைமையில் நடைபெற்றது. குறுந்தகட்டை கல்லூரிக் கல்வி மண்டல இணை இயக்குநா் சி.ஜோதி வெங்கடேஸ்வரன் வெளியிட்டாா். இதனை, ஐவிடிபி தொண்டு நிறுவனத்தின் நிறுவனா் குழந்தை பிரான்சிஸ் பெற்றுக்கொண்டாா் (படம்).

இதில், தமிழ்த் துறைத் தலைவா் மு.செந்தில்குமாா் வரவேற்று பேசினாா். கிருஷ்ணகிரி அரசு மகளிா் கல்லூரி தமிழ்த் துறை கா.சிவகாமி, கல்லூரி பேராசிரியா்கள், மாணவியா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.