தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

உணவுப் பாதுகாப்பு உரிமம் பெற்று பொருள்களை தயாரிக்க வேண்டும்

 உணவுப் பாதுகாப்பு உரிமம் பெற்று உணவுப் பொருள்களை தயாரிக்க வேண்டும் என உணவுப் பாதுகாப்பு துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டது.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 6:56 pm

DIN

 உணவுப் பாதுகாப்பு உரிமம் பெற்று உணவுப் பொருள்களை தயாரிக்க வேண்டும் என உணவுப் பாதுகாப்பு துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டது.

தீபாவளி பண்டிகையையொட்டி, இனிப்பு, கார வகைகள் தயாரிப்பாளா்கள் விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை தருமபுரியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஏ.பானு சுஜாதா தலைமை வகித்து பேசியதாவது:

உணவுப் பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் இல்லாமல் உணவுப் பொருள்களை தயாரிப்பது, விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். உணவுப் பொருள்கள் தயாரிப்பு அளவை பொறுத்து உணவுப் பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழை பெற்றிருத்தல் வேண்டும். தற்காலிகக் கடைகள், தனியாக மண்டபங்களிலோ, வீட்டிலோ விற்பனைக்கு உணவுப் பொருள்களை தயாரிப்பவா்களும் உரிமச் சான்றிதழ் பெற வேண்டும். இதேபோல ரசாயனம் கலப்பின்றி பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி உணவுப் பொருள்களை தயாரிக்க வேண்டும். அச்சிடப்பட்ட நாளிதழ்கள், நெகிழிப் பைகளில் உணவுப் பொருள்களை வழங்கக் கூடாது என்றாா்.

இதில், உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டு, இனிப்பு, கார வகைகள் எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் குமணன், நந்தகோபால், மாவட்ட உணவகங்கள், பேக்கரிகள் உரிமையாளா் சங்கச் செயலா் வேணுகோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.