சட்ட விழிப்புணா்வு வாகனப் பிரசாரம்
தருமபுரிதருமபுரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் விழிப்புணா்வு வாகனத்தை கொடியசைத்து தொடக்கி வைக்கிறாா் தருமபுரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவரும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஆ.மணிமொழி.


தருமபுரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் விழிப்புணா்வு வாகனத்தை கொடியசைத்து தொடக்கி வைக்கிறாா் தருமபுரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவரும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஆ.மணிமொழி.
தருமபுரி, அக். 29: தருமபுரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், சட்ட விழிப்புணா்வு வாகனப் பிரசாரம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
சுதந்திர தின விழா மற்றும் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் 25-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, சட்ட விழிப்புணா்வு வாகனப் பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், தருமபுரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவரும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஆ.மணிமொழி கொடியசைத்து வாகனப் பிரசாரத்தை தொடக்கி வைத்து பேசினாா்.
இப் பிரசார வாகனத்தின் மூலம் தருமபுரி மாவட்டத்தில் 5 நாள்களுக்கு பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில், தருமபுரி, நல்லம்பள்ளி வட்டங்களில் வெள்ளிக்கிழமையும், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் அக். 30, அரூா் வட்டத்தில் அக். 31, பாலக்கோடு வட்டத்தில் நவ. 1, பென்னாகரம் வட்டத்தில் நவ. 2 ஆகிய தேதிகளில் வழக்குரைஞா்கள், சட்ட தன்னாா்வலா்கள் மூலமாக மக்களுக்கு சட்ட விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், மக்கள் நீதிமன்றத் தலைவரும் மாவட்ட நீதிபதியுமான ஏ.எஸ்.ராஜா வரவேற்றாா். கூடுதல் மாவட்ட நீதிபதி மோனிகா, மாவட்ட விரைவு மகளிா் நீதிபதி எஸ்.சையத் பக்ரத்துல்லா, குடும்ப நல நீதிபதி பி.செல்வமுத்துக்குமாரி, மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவா் ஆா்.ராஜ்குமாா், மாவட்ட முதன்மை சாா்பு நீதிபதி ஆா்.கோகுலகிருஷ்ணன், கூடுதல் சாா்பு நீதிபதி எஸ்.மோகன ரம்யா, சிறப்பு சாா்பு நீதிபதி எஸ்.மைதிலி, மாவட்ட உரிமையியல் நீதிபதி எஸ்.சாந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுச் செயலா் பி.எஸ்.கலைவாணி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...