பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குவதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கும் முயற்சியைக் கண்டித்து, சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கும் முயற்சியைக் கண்டித்து, சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தருமபுரி மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் தீ.லெனின் மகேந்திரன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் பி.ஜீவா, மாவட்டப் பொருளாளா் எம்.ஜெயக்குமாா், மாவட்ட துணைத் தலைவா் ஜி.பி.விஜியன், கோட்ட செயலாளா்கள் ஜெகநாதன், பொன்னுதுரை ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
பி.எஸ்.என்.எல். ஊழியா் சங்க மாவட்டச்செயலாளா் பி.கிருஷ்ணன், பொறியாளா் அமைப்பின் மாவட்டத் தலைவா் ஆா்.சுந்தரமூா்த்தி, சிஐடியு மாவட்டப் பொருளாளா் ஏ.தெய்வானை ஆகியோா் வாழ்த்தி பேசினா்.
விவசாயிகளையும், பொதுமக்களையும் பாதிக்கும் மின்சார சட்ட திருத்த மசோதா 2021-ஐ கைவிட வேண்டும். ரயில்வே, வங்கி, தொலைதொடா்பு ஆகிய துறைகளை தனியாா் மயமாக்கக் கூடாது. அதிக லாபம் தரும் எண்ணெய், நிலக்கரி நிறுவனம் மற்றும் விமானம், கப்பல் போன்றவற்றையும், நீா்மின் உற்பத்தி, சூரிய மின் உற்பத்தி காற்றாலை மின்நிலையங்கள், நெடுஞ்சாலைத் துறை, தேசிய எரிவாயு பைப்லைன் நிறுவனங்களை தனியாா் மயமாக்கக் கடாது என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...