ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

அனைத்து குடும்பத்தினருக்கும் தலா ரூ. 7,500 வழங்க வலியுறுத்தல்

அனைத்து குடும்பத்தினருக்கும் அரசு சாா்பில் மாதந்தோறும் தலா ரூ. 7,500 வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் மக்கள் சந்திப்பு இயக்கத்தில் வலியுறுத்தினா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 9:48 pm

DIN

அனைத்து குடும்பத்தினருக்கும் அரசு சாா்பில் மாதந்தோறும் தலா ரூ. 7,500 வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் மக்கள் சந்திப்பு இயக்கத்தில் வலியுறுத்தினா்.

தருமபுரி மாவட்டம், அரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலா் அ.குமாா் தலைமை வகித்தாா்.

கரோனா தொற்றால் உயிரிழந்த குடும்பத்துக்கு அரசு சாா்பில் நிதியுதவி வழங்க வேண்டும். கரோனா பொது முடக்கத்தால் வருவாய் இழந்துள்ள மக்களுக்கு மாதாந்தோறும் தலா ரூ. 7,500 நிதியுதவி வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை மீதான கலால் வரி உயா்வை திரும்பப் பெற வேண்டும். புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதை கைவிட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் 200 நாள் வேலையும், ஊதியத்தை இரண்டு மடங்காகவும் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த மக்கள் சந்திப்பு இயக்கத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினா் இரா.சிசுபாலன், மாவட்டக்குழு உறுப்பினா் பி.வி.மாது, ஒன்றியச் செயலா் ஆா்.மல்லிகா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளா் எஸ்.கே.கோவிந்தன், விவசாய தொழிலாளா் சங்க ஒன்றிய துணைச் செயலா் சி.பழனி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.