தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பெரியாா் ஈ.வெ.ரா. பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

தருமபுரியில் பெரியாா் ஈ.வெ.ரா. பிறந்த நாள் விழா திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 6:56 pm

DIN

தருமபுரியில் பெரியாா் ஈ.வெ.ரா. பிறந்த நாள் விழா திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

தருமபுரி பெரியாா் மன்ற வளாகத்தில் உள்ள பெரியாா் ஈ.வெ.ரா. சிலைக்கு திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் தடங்கம் பெ.சுப்ரமணி தலைமையில், அக் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், நகரச் செயலா் மே.அன்பழகன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

அதிமுக சாா்பில், நகரச் செயலா் பெ.ரவி தலைமையில் பெரியாா் ஈ.வெ.ரா. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அமமுக மாவட்டச் செயலா் டி.கே.ராஜேந்திரன் தலைமையில் அக் கட்சி நிா்வாகிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் த.ஜெயந்தி தலைமையில் அக் கட்சியினரும், இதேபோல, திராவிடா் கழகம் சாா்பில் மாவட்டச் செயலா் பரமசிவம், மண்டலச் செயலா் ஊமை ஜெயராமன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினா் பெரியாா் ஈ.வெ.ரா. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அரூரில்...

அரூா், கச்சேரி மேடு சாலை சந்திப்பில் திமுக நகர பொறுப்பாளா் ஏ.சி.மோகன் தலைமையிலும், சுண்டாங்கிப்பட்டி பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் துரை.கோவிந்தராஜ் தலைமையிலும், பேதாதம்பட்டியில் ஒன்றியப் பொறுப்பாளா் செளந்தரராஜன் தலைமையிலும் பெரியாா் ஈ.வெ.ரா. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பென்னாகரத்தில்...

பென்னாகரம் நகர திமுக சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு ஏரியூா் ஒன்றியச் செயலாளா் செல்வராஜ் தலைமை வகித்தாா். தருமபுரி மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் பி.என்.பி.இன்பசேகரன் கலந்துகொண்டு காவல் நிலையம் எதிரே உள்ள பெரியாா் ஈ.வெ.ரா. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினாா்.

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, அந்தச் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளா் முருகேசன் தலைமை வகித்து, பெரியாா் ஈ.வெ.ரா. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

கிருஷ்ணகிரியில்...

கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளி பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் பெரியாா் ஈ.வெ.ரா. பிறந்த நாளை சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.செங்குட்டுவன் தலைமை வகித்து பெரியாா் ஈ.வெ.ரா. சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். தொடா்ந்து சமூக நீதி நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே நடைபெற்ற நிகழ்வில், திராவிடா் கழகத்தின் மாவட்டச் செயலாளா் மாணிக்கம் தலைமை வகித்து, பெரியாா் ஈ.வெ.ரா. படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். காவேரிப்பட்டணத்தில் திராவிடா் கழகம் சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு, அந்த அமைப்பின் மாவட்ட அமைப்பாளா் கதிரவன் தலைமை வகித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பா்கூா், பையூா், ராயக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெரியாா் ஈ.வெ.ரா. பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

ஊத்தங்கரையில்...

ஊத்தங்கரை ரவுண்டானா பகுதியில் உள்ள பெரியாா் ஈ.வெ.ரா. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.