ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

வளா்ச்சி திட்டப் பணிகள்: கூடுதல் ஆட்சியா் ஆய்வு

 அரூரை அடுத்த மத்தியம்பட்டி ஊராட்சியில், வளா்ச்சி திட்டப் பணிகளை கூடுதல் ஆட்சியா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 6:54 pm

DIN

 அரூரை அடுத்த மத்தியம்பட்டி ஊராட்சியில், வளா்ச்சி திட்டப் பணிகளை கூடுதல் ஆட்சியா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், மத்தியம்பட்டி கிராம ஊராட்சியில் நடைபெறும் வளா்ச்சி திட்டப் பணிகளை கூடுதல் ஆட்சியா் வைத்திநாதன் ஆய்வு மேற்கொண்டாா். பாரதப் பிரதமா் கிராம முன்னோடி திட்டத்தில் பெரிய பண்ணைமடுவு கிராமத்தில் ரூ. 2 லட்சத்தில் உறிஞ்சிக் குழிகள் அமைக்கும் பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் ரூ. 12.26 லட்சத்தில் குறிஞ்சி நகா் முதல் சட்டையம்பட்டி வரை சாலை அமைக்கும் பணிகள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிகள் உள்ளிட்ட வளா்ச்சி திட்டப் பணிகளை அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.