ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

அரூரில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி அரூரில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 7:23 pm

DIN

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி அரூரில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், ஐஎன்டியுசி உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் அரூா் போக்குவரத்துக் கழக கிளை பணிமனை முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச மத்திய சங்க துணைப் பொதுச் செயலாளா் பி.தங்கமணி தலைமை வகித்தாா்.

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளா் நல சட்டங்களை நான்கு தொகுப்பாக திருத்தியதை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை உயா்வுகளை ரத்து செய்ய வேண்டும்.

பொது சொத்துகளை தனியாருக்கு விற்பனை செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், சங்க நிா்வாகிகள் ஏ.எஸ்.செல்வம், பி.காந்தி, எஸ்.அசோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.