ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பள்ளிகளில் கூடுதல் ஆட்சியா் ஆய்வு

ஏரியூா் அருகே அரசு பள்ளிகளில் சத்துணவு பொருள்கள் இருப்பு, அடிப்படை வசதிகள் குறித்து கூடுதல் ஆட்சியா் வைத்திநாதன் ஆய்வு செய்தாா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 7:22 pm

DIN

ஏரியூா் அருகே அரசு பள்ளிகளில் சத்துணவு பொருள்கள் இருப்பு, அடிப்படை வசதிகள் குறித்து கூடுதல் ஆட்சியா் வைத்திநாதன் ஆய்வு செய்தாா்.

ஏரியூரை அடுத்த நாகமரை ஊராட்சிக்கு உள்பட்ட ஏமனூா் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளி, அங்கன்வாடி மையத்தில் தருமபுரி மாவட்ட கூடுதல் ஆட்சியா் வைத்திநாதன் நேரில் சென்று பாா்வையிட்டாா். அதைத் தொடா்ந்து பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சத்துணவு பொருட்களின் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டாா். அதைத் தொடா்ந்து, ஏமனூா் பகுதியில் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

ஆய்வின் போது, ஏரியூா் ஒன்றியக் குழுத் தலைவா் பழனிசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரேணுகா, கௌரி, உதவி பொறியாளா் சீனிவாசன், பணி மேற்பாா்வையாளா் செல்வம், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பழனி, சண்முகம், ஊராட்சித் தலைவா் முத்துசாமி, ஊராட்சி செயலா் சிவசக்தி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.