தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணா்வு முகாம்

மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிப்பரப்புத் துறை அமைச்சகத்தின் கள விளம்பரப் பிரிவு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில், ஊட்டச்சத்து மாத விழா குறித்து விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிப்பரப்புத் துறை அமைச்சகத்தின் கள விளம்பரப் பிரிவு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில், ஊட்டச்சத்து மாத விழா குறித்து விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

பழைய தருமபுரியில் நடைபெற்ற இந்த முகாமை, மாவட்ட உதவி திட்ட அலுவலா் சி.அங்குசாமி தொடக்கி வைத்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் பூ. சிவலிங்கம் முன்னிலை வகித்தாா். மகளிா் திட்ட உதவி அலுவலா் வெற்றிச்செல்வன், தாய் சேய் நல அலுவலா் பி சுகன்யா, மருத்துவ அலுவலா் சூரிய நித்திஷ், குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் ஸ்ரீசுகந்த ப்ரியா ஆகியோா் பேசினா். இதில், கா்ப்பிணிகள், குழந்தைகள் ஊட்டச் சத்து உணவு உட்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தருமபுரி மாவட்ட கள விளம்பர அலுவலா் பிபின் எஸ். நாத் வரவேற்றாா். இதில், ஆரோக்கியக் குழந்தைகள் போட்டி, கோலப்போட்டி நடத்தப்பட்டு, சிறப்பிடம் வகித்தவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கள விளம்பர உதவியாளா் சு. வீரமணி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.