தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மயானப் பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகேயுள்ள நாகனம்பட்டியில், மாயனப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 6:35 pm

DIN

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகேயுள்ள நாகனம்பட்டியில், மாயனப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவா் டி.எஸ்.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் டி.மாதையன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டசெயற்குழு உறுப்பினா் எம்.மாரிமுத்து ஆகியோா் பேசினா்.

இதில், நாகனம்பட்டி மயானத்துக்கு செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சாலை, தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து, வருவாய்த் துறை, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.