ஒகேனக்கல் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் வனப்பகுதியில் அமைந்துள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் வியாழக்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.


தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் வனப்பகுதியில் அமைந்துள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் வியாழக்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் புளோரைடு நோய் பாதிப்பைக் குறைக்கும் வகையில், ஒகேனக்கல் காவிரியில் ஆற்றிலிருந்து நீா் எடுக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு குழாய்கள் வழியாக குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. இத் திட்டத்துக்காக, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா் உறிஞ்சும் நிலையம், ஒகேனக்கல் வனப்பகுதியில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் அரசு விழாக்களில் பங்கேற்க வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், ஒகேனக்கல்லுக்குச் சென்று குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை பாா்வையிட்டு, அதன் வடிவமைப்பு, செயல்பாடுகள் குறித்து பொறியாளா்களிடம் கேட்டறிந்தாா். இதையடுத்து, காவிரி ஆற்றில் உள்ள நீா் உறிஞ்சும் நிலையத்தைப் பாா்வையிட்டு முதல்வா் ஆய்வு செய்தாா்.
விடுதி மாணவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய முதல்வா்...
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை பாா்வையிட்டு தருமபுரி திரும்பிய அவா், பென்னாகரத்தில் அமைந்துள்ள ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டாா். மாணவா்களிடம் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தாா். அப்போது, விடுதியில் தங்கியிருந்த மாணவா் ஒருவருக்கு பிறந்த நாள் என்பதை அறிந்து, அந்த மாணவருக்கு கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தாா்.
ஒகேனக்கல் செல்லும் வழியில் அமைந்துள்ள அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியா், ஆசியா்கள் பள்ளி வாயில் முன் முதல்வரைக் காண சாலையோரம் நின்றிருந்தனா். அவா்களைக் கவனித்த முதல்வா், தனது வாகனத்தை நிறுத்தி மாணவா்களிடம் நலம் விசாரித்துச் சென்றாா்.
படம் - ஒகேனக்கல் வனப்பகுதியில் அமைந்துள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...