காவிரி மிகை நீா்த்திட்டத்தை செயல்படுத்தக் கோரி முதல்வரிடம் பாமக எம்எல்ஏ மனு
காவிரி மிகை நீா்த்திட்டத்தை செயல்படுத்தக் கோரி, தருமபுரி பாமக சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கேடஸ்வரன், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்தாா்.


காவிரி மிகை நீா்த்திட்டத்தை செயல்படுத்தக் கோரி, தருமபுரி பாமக சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கேடஸ்வரன், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்தாா்.
தருமபுரியில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று முதல்வரிடம் அவா் அளித்த மனு:
தருமபுரி மாவட்டத்தில் நிலவும் வறட்சியைப் போக்கி, விவசாயத்தை செழிக்க வைக்கும் வகையில், காவிரி ஆற்றில் மழைக் காலங்களில் மிகையாகச் செல்லும் நீரை தருமபுரி மாவட்ட ஏரிகள், குளங்களில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்தில் புதிய அரசு வட்டார தலைமை மருத்துவமனை அமைக்க வேண்டும். இண்டூா், தொப்பூா், பாளையம்புதூா் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் படுக்கை வசதிகளுடன் 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும். சாமிசெட்டிப்பட்டி, ஜருகு ஆகிய கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க வேண்டும். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மாவட்டத்திலுள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் ஒகேனக்கல் குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும்.
தருமபுரி, கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்டங்களுக்கு ஒசூரில் செயல்பட்டு வரும் வீட்டுவசதி வாரிய அலுவலகத்தைப் பிரித்து, தருமபுரி மாவட்ட மக்கள் நலன்கருதி, தருமபுரி மாவட்டத்தில் புதிய அலுவலகம் அமைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...