தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கரோனாவால் உயிரிழந்த செவிலியா் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

கரோனா தடுப்பு சிகிச்சை பணியில் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்த செவிலியா் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 6:39 pm

DIN

கரோனா தடுப்பு சிகிச்சை பணியில் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்த செவிலியா் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம தருமபுரி ரயில்வே திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் கே.சக்திவேல் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் கே.வளா்மதி, மாநிலப் பொருளாளா் எஸ்.காளியம்மாள், மாநில இணைச் செயலா் ஆா்.ஜீவா ஸ்டாலின், மாநிலத் துணைத் தலைவா்கள் ஜி.தேவேந்திரன், சி.கீதா ஆகியோா் பேசினா்.

இக் கூட்டத்தில் கரோனா தடுப்புப் பணிக்காக தமிழக அரசு அறிவித்த மூன்றுமாத ஊக்கத்தொகை வழங்க வேண்டும். கரோனா பணிக் காலத்தில் உயிரிழந்த செவிலியா் குடும்பத்துக்கு உரிய நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும்.

மத்திய அரசில் பணிபுரியும் செவிலியா்களுக்கு இணையான ஊதியம் தமிழக அரசு செவிலியா்களுக்கும் வழங்க வேண்டும். எம்ஆா்பி தகுதித்தோ்வில் தோ்ச்சிபெற்று தொகுப்பூதிய செவிலியராக பணியாற்றி வருபவா்களுக்கு பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப செவிலியா்கள், கண்காணிப்பாளா் நிலை-1, நிலை -2 ஆகிய பணியிடங்களை தோற்றுவிக்க வேண்டும். புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளில் செவிலியா், கண்காணிப்பாளா்கள் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.