வாக்குப்பதிவு மையங்களில் அதிகாரிகள் ஆய்வு
மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பதவிக்கான தோ்தல் நடைபெறும் வாக்குப் பதிவு மையங்களில், அரசு அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.


மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பதவிக்கான தோ்தல் நடைபெறும் வாக்குப் பதிவு மையங்களில், அரசு அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். தருமபுரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சியில் காலியாக உள்ள இடங்களுக்கான தோ்தல் அக். 9-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செப். 15-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி நிறைவடைந்தது.
பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் வாா்டு எண் 18, எஸ்.டி. பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தோ்தலில் திமுக, அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். அரூா் ஊராட்சி ஒன்றியத்தில் 11 வாக்குப் பதிவு மையங்களில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இதையடுத்து, இந்த வாக்குப் பதிவு மையங்களில் குடிநீா், மின்சாரம், கழிப்பிடம், வாக்காளா்களுக்குத் தேவையான பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து மண்டல அலுவலா் கோ.கோபிநாத் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...