தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அரூா் பேருந்து நிலையத்தை சீரமைக்க தீா்மானம்

அரூா் பேருந்து நிலையத்தை நவீன வசதிகளுடன் சீரமைக்க பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 5:53 pm

DIN

அரூா் பேருந்து நிலையத்தை நவீன வசதிகளுடன் சீரமைக்க பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரூா் பேரூராட்சியின் முதலாவது வாா்டு உறுப்பினா்கள் கூட்டம், அந்தப் பேரூராட்சியின் தலைவா் இந்திராணி தனபால் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அரூா் பேருந்து நிலையம் சுமாா் 1.50 ஏக்கா் பரப்பளவு கொண்டதாகும். இந்த பேருந்து நிலையத்தை நவீன வசதிகளுடன் சீரமைப்பு செய்ய வேண்டும். அரூா் பேரூராட்சிக்கு உள்பட்ட அனைத்து வாா்டுகளிலும் கழிவுநீா் கால்வாய் சீரமைப்பு, தெரு விளக்குகள் அமைத்தல், குடிநீா் வசதிகளை ஏற்படுத்துதல், தெருச்சாலைகளைச் சீரமைக்க வேண்டும். ஐக்கிய அரபு நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு தொழில் முதலீடுகளை ஈா்த்துள்ள தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தல் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், செயல் அலுவலா் ஆா்.கலைராணி, பேரூராட்சி துணைத் தலைவா் சூா்யா து.தனபால், வாா்டு உறுப்பினா் முல்லை ரவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.