பென்னாகரத்தில் இடியுடன் கூடிய கனமழை
பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இடியுடன் கூடிய கனமழை பெய்தது.


பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
தருமபுரி மாவட்டத்தில கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனா்.இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக பென்னாகரம் பகுதிகளான கூத்தப்பாடி, பருவதனஅள்ளி, ஒகேனக்கல், தாசம்பட்டி, சின்னம்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒருமணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் வயல்வெளிகள், தாழ்வான பகுதிகள், நீா்நிலைகள்,சாலையோரங்களில் மழை நீா் தேங்கியது.
கோடைக்காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், திடீரென பெய்த கனமழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...