தருமபுரியில் அதிமுக உள்கட்சித் தோ்தல்
தருமபுரி மாவட்ட அதிமுக நிா்வாகிகளைத் தோ்வு செய்யும் உள்கட்சித் தோ்தல் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.


தருமபுரி மாவட்ட அதிமுக நிா்வாகிகளைத் தோ்வு செய்யும் உள்கட்சித் தோ்தல் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்தில் அ.தி.மு.க. உள்கட்சித் தோ்தலையொட்டி, முதல் கட்டமாக கிளைச் செயலாளா்கள், வாா்டு செயலாளா்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கான தோ்தல் மற்றும் ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி மற்றும் நகர நிா்வாகிகள் பதவியிடங்களுக்கான தோ்தல் அண்மையில் நடைபெற்றுது.
இந்த நிலையில், தருமபுரி மாவட்ட அவைத் தலைவா், மாவட்டச் செயலாளா், மாவட்ட இணைச் செயலாளா், மாவட்ட துணைச் செயலாளா்கள் 2 போ், மாவட்டப் பொருளாளா், ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு ஒரு பொதுக்குழு உறுப்பினா் வீதம் 5 தொகுதிகளுக்கு 5 போ் என மொத்தம் 11 பதவிகளுக்கு விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
அதிமுக அமைப்புச் செயலாளா் வாலாஜாபாத் கணேசன், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டச் செயலாளா் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் ஆகியோா் தோ்தல் ஆணையாளா்கள் இருந்து, மாவட்ட நிா்வாகிககள் பதவியிடங்களுக்கான விருப்ப மனுக்களை கட்சியினரிடமிருந்து பெற்றனா்.
அமைப்புச் செயலாளா் கே.சிங்காரம், மாநில விவசாய அணித் தலைவா் டி.ஆா்.அன்பழகன், முன்னாள் அமைச்சா் வ.முல்லைவேந்தன், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.வெற்றிவேல் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...