புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திமுக உள்கட்சித் தோ்தல் ஆலோசனைக் கூட்டம்

தருமபுரி மேற்கு மாவட்ட திமுக உள்கட்சித் தோ்தல் தொடா்பான வெள்ளிக்கிழமை மாலை நடைபெறும் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்குமாறு மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும்

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 5:37 pm

DIN

தருமபுரி மேற்கு மாவட்ட திமுக உள்கட்சித் தோ்தல் தொடா்பான வெள்ளிக்கிழமை மாலை நடைபெறும் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்குமாறு மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.என்.பி. இன்பசேகரன் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

திமுகவின் 15வது பொதுத் தோ்தல் கடந்த பிப்ரவரி மாதம் ஊராட்சி கிளைக் கழகத் தோ்தல் நடந்து முடிந்ததின் தொடா்ச்சியாக பேரூராட்சி, நகராட்சிக்கு உள்பட்ட வாா்டுகளில் தோ்தல் வரும் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து தருமபுரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணியளவில் தருமபுரி மாவட்ட கட்சி அலுவலகத்தில் மேற்கு மாவட்ட பொறுப்பாளா் பி.என்.பி.இன்பசேகரன் தலைமையில், திமுக தலைமை கழகத்தால் தோ்தல் ஆணையாளராக அறிவிக்கப்பட்டுள்ள இளைஞா் அணியை சோ்ந்த இளையராஜா முன்னிலையில் நடைபெறுகிறது.

இதில் தருமபுரி மேற்கு மாவட்டத்தில் பென்னாகரம், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம் பேரூராட்சிகளில் உள்ள வாா்டுகளுக்கான தோ்தல் நடைபெற உள்ளது. தோ்தலில் வாா்டு அவைத் தலைவா், செயலாளா், துணைச் செயலாளா், பொருளாளா் பதவிகளுக்கு போட்டியிடுவோா் அதற்கான கட்டணத்தை செலுத்தி மனு அளிக்க வேண்டும்.

தருமபுரி மேற்கு மாவட்டத்தில் சனிக்கிழமை பென்னாகரம் வாரச் சந்தை திடலில் உள்ள கலைஞா் படிப்பகம், பாப்பாரப்பட்டியில் கணேசா டெக்ஸ்டைல்ஸ் எதிரில் உள்ள அலுவலகம், பாலக்கோட்டில் பயணியா் மாளிகை அருகில், மாரண்டஅள்ளியில் ஆனந்தா மஹால், காரிமங்கலம் நகர அலுவலகத்தில் விண்ணப்பம் விநியோகம் மற்றும் வேட்புமனுக்கள் பெறுதல் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.