மருத்துவ அலட்சியத்தால் மனைவி, குழந்தை மரணம்: கணவருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு
மருத்துவ அலட்சியத்தால் மனைவி, குழந்தை மரணமடைந்த விவகாரத்தில், கணவருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.


மருத்துவ அலட்சியத்தால் மனைவி, குழந்தை மரணமடைந்த விவகாரத்தில், கணவருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே உள்ள அரியக்குடியைச் சோ்ந்தவா் முருகேசன். இவரது மனைவி கீா்த்திகா. கடந்த 2019-ஆம் ஆண்டு இவா், பிரசவத்துக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பிரசவத்தில் குழந்தை பிறந்த நிலையில், தாயும், குழந்தையும் இறந்தனா்.
பணியில் இருந்த செவிலியா்கள் பிரசவம் பாா்த்ததால் இருவரும் இறந்து போனதாக கீா்த்திகாவின் உறவினா்கள் குற்றம்சாட்டினா். இதுதொடா்பாக நாளிதழில் வெளியான செய்தியை மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்தது.
வழக்கை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினா் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன், ‘மருத்துவ அலட்சியத்தால் தாயும், குழந்தையும் இறந்தது தெரியவருகிறது. எனவே, கீா்த்திகாவின் கணவா் முருகேசனுக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும்’ என்று தனது உத்தரவில் பரிந்துரைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...